Bhajagovindam

Home / Classes Recorded / Other Vedantic Texts / Bhajagovindam

Bhajagovindam

Bhajagovindam (Seek of Infinite Lord Govinda) is a Spiritually inspiring text of 30 Verses authored by Adi Sankaracharya and his disciples. Seeing an Old man list in grammar study at Kasi, the acharya admonishes him and reminds him of the real purpose of life. Inspired by these 12 Verses (Dvadasa Manjarika - Stotram), his disciples aslo contribute their own, known as catpata panjarika - Stotram (18 Verses) This text is also known as Mohamudgarah - A hammer to pulverize delusion. As this title reveals, the aim of this text is to is to shake the Human beings lost in the worldly pursuits. Intention of the text is to turn the attention of every one to Infinite Lord which endures our life and not to make one pessimistic.

பஜகோவிந்தம்

பஜகோவிந்தம்! ஸர்வத்திற்கும் ஆதாரமான அந்த பரம்பொருளான கோவிந்தனை அறி ! இந்த ப்ரபஞ்சம் அநித்யம். இதிலேயே உழன்று உன் பொன்னான காலத்தை வீணாக்காமல் இந்த மயக்கத்திலிருந்து வெளியே வா ! என்று பகவான் ஸங்கரர் முத்கரம் என்று சொல்லப்படும் உளியால் நம்மை செதுக்கி மோக்ஷ மார்க்கத்திற்கு நம்மை அழைத்துச் செல்ல முற்படுகிறார். இதுவே மோஹமுத்கரம் என்று சொல்லப்படும் ‘பஜகோவிந்தம்’ ஆகும். பகவான் ஸங்கரர் த்வாதஸ மஞ்சரிகா என்று 12 ஸ்லோகங்களும், அவருடைய ஸிஷ்யர்கள் சேர்ந்து குருவிற்கு மரியாதை செலுத்தும் வகையில் ‘சார்பட மஞ்சரிகா’ என 18 ஸ்லோகங்களும் ஆக 30 ஸ்லோகங்களை உடையது. பகவான் ஸங்கரர், காசியில் 90 வயது முதியவர் ஒருவர் ஸமஸ்க்ருத தாதுபாடத்தை ஒப்பித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து இந்த வயதிலும் ஆத்மஞானத்திற்கு தன்நேரத்தைச் செலவழிக்காமல் தன் அஹங்காரத்துக்கு முக்கியத்வம் கொடுத்துக்கொண்டிருந்த அந்த முதியவரைப் பார்த்து ஸங்கர பகவான் மனத்தில் உதித்ததே இந்த ‘பஜகோவிந்தம்’ இது உலக மக்கள் அனைவருக்கும் பொருந்தக்கூடிய அருமையான க்ரந்தம். இந்த க்ரந்தத்தின் நோக்கமே மக்கள் இந்த அநித்ய உலகத்தின் மீது உள்ள மோஹத்தை அகற்றி நித்யவஸ்து வாகிய ஆத்மாவிடம் மனத்தை நிலை நிறுத்த வேண்டும் என்பதே.


Class Name Download Audio YouTube
Class 01 Download Play
Class 02 Download Play
Class 03 Download Play
Class 04 Download Play
Class 05 Download Play
Class 06 Download Play
Class 07 Download Play
Class 08 Download Play
Class 09 Download Play